பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!பறவைகள் ஏன் ஏ வடிவில் பறக்கின்றன உங்களுக்கு தெரியுமா?..

0
174

அறியாத அறிவியல் உண்மைகள்…!!பறவைகள் ஏன்  ஏ வடிவில் பறக்கின்றன உங்களுக்கு தெரியுமா?..

 

பறவைகள் ஏ வடிவத்தில் பறப்பதால் அவை அதிக அளவு ஆற்றலை சேமிக்கின்றன. இதனால் அவை வெகு தூரம் தொடர்ந்து பறக்க முடிகிறது. அவை தனியாக பறப்பதினால் பயன்படுத்தப்படும் ஆற்றலை விட இதுபோல் ஏ வடிவத்தில் பறப்பதினால் அவைகளின் ஆற்றலில் 70 சதவீதம் வரை சேமிக்கின்றன.பொதுவாக தனியாக ஒரு பறவை பறக்கும்பொழுது காற்றில் அதன் பின்னிழுக்கும் விசை மிக அதிகமாக இருக்கும். பறவைகள் இதுபோல ஏ வடிவில் பறப்பதால் அதன் பின்னிழுக்கும் விசை வலுவிழந்து சமமான மிதக்கும் விசை காரணமாக பறவைகள் தொடர்ந்து வெகுதூரம் இலகுவாக பறக்கின்றன. முக்கியமான விஷயம் என்னவென்றால் அனைத்து பறவைகளும் இதன் காரணமாக எளிதாக பறப்பதில்லை.

 

ஏ வடிவில் பறக்கும் பறவைகளில் இரண்டு நுனிகளிலும் நடுவிலும் பறக்கும் பறவைகள் காற்றிற்கு எதிராக பறக்கையில் அதிகபட்ச உராய்வினால் மிக அதிக ஆற்றலை எடுத்துக் கொள்கின்றன. எனவே மிக விரைவில் சோர்வடைகின்றன. அப்படி சோர்வடையும்போது பின்னால் வருகிற பறவைகள் தலைமை பொறுப்பை எடுத்துக்கொண்டு முன்னே வந்து தொடர்ந்து பறக்கின்றன.சோர்வடைந்த பறவை பின்னே தொடர்ந்து வரும். இப்படியே தொடர்ந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பறக்கின்றன. இதன் காரணமாக அனைத்து பறவைகளுக்கும் தலைமை பொறுப்பை ஏற்கிற வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் சோர்வடையும் போது நடுவில் ஓய்வு எடுத்துக்கொள்கின்றன.

இது போல மிக நீண்ட தூரம் பறப்பதால் எந்த பறவையும் அதன் சக பறவையை எந்த நிலையிலும் பார்க்க முடியும். இதனால் தொலைந்து விடுவதற்கான வாய்ப்புகளும் குறைவு. மேலும் அவை கூட்டத்தை பின் தொடர்ந்து கொண்டிருக்கும்.

 

Previous articleகுளு குளுவென பணிபுரிய ஆசையா?. அப்போ ஏன் வெயிட் பண்றீங்க.. உடனே விண்ணப்பியுங்கள்…
Next articleஇங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..