பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா?

0
220

பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எந்தவொரு கேஸ் சிலிண்டர்களும் தானாக வெடிப்பது கிடையாது. அதனை நாம் தவறான முறையில் பயன்படுத்துவதினால் தான் வெடிக்கிறது.கேஸ் சிலிண்டர் அல்லது ரெகுலேட்டரில் கேஸ் கசியும் பிரச்சனை இருந்தால் வாயு காற்றுடன் கலந்து எளிதில் தீ பற்றக்கூடிய கலவையாக மாறுகிறது. இத்தகைய கலவை தீப்பிழம்பாக மாற சிறிய தீப்பொறி அல்லது தீ பற்ற வைக்கும் மூலங்கள் தேவைப்படுகிறது. தீப்பொறி வாயு கலவையுடன் கலந்ததும் வாயு கலவையை எரியூட்டி வெடி விபத்து நிகழ்கிறது. இத்தகைய கேஸ் சிலிண்டர் வெடிப்பு பொதுவாக மக்கள் விழிப்புணர்வுடன் இல்லாமல் இருப்பதினால் ஏற்படுகிறது.ஒரு கேஸ் சிலிண்டரானது ஒரு சதுர சென்டி மீட்டருக்கு 25 கிலோ வரையிலான அழுத்தத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு கேஸ் சிலிண்டருக்குள் எரிவாயுவானது ஒரு சதுர சென்டி மீட்டருக்கு ஐந்து முதல் ஏழு வரையிலான அழுத்தத்துடனேயே பராமரிக்கப்படுகிறது.

ஆனால் மக்கள் இந்த கேஸ் சிலிண்டரை தூக்கி எறிவது, வெப்பப்படுத்துவது போன்ற பாதுகாப்பற்ற முறைகளை கையாளும்போது கேஸ் சிலிண்டர் ஒரு வெடி அணுகுண்டாக மாறுகிறது. ஆகவே கேஸ் சிலிண்டர்களை கையாளும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம். எனவே இனிவரும் சமுதாயங்களில் பெண்கள் பாதுகாப்புடன் சிலிண்டரை இயக்க வேண்டும்.

 

 

Previous articleவீட்டு வாசல் படியில் எலுமிச்சை வைப்பது ஏன்? உங்களுக்கு  தெரியுமா? அப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க…!!
Next articleபார்த்தாவே நாக்கில் எச்சி ஊரும்!.. மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி!.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க…