18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பில் புதிய அதிசயம்
உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு பழமையான மிருகங்கள் மற்றும் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் உடல்களை கண்டுபிடிப்பது வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக சைபீரியா என்ற பகுதி குளிர் மிகுந்த பகுதி என்பதால் அங்கு உறைந்த நிலையில் பல பழமையான உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது
அந்த வகையில் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் அரிய வகை விலங்கு ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த விலங்கை ஆராய்ந்தபோது அதன் முடிகூட உதிராமல் பற்கள் வெள்ளையாகவும் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். இந்த விலங்கை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது அது 18 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை கண்டுபிடித்தனர்
18 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருந்தும் முடி உதிராமல், பற்களின் நிறம் கூட மாறாமல் இருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்களை அதிசயித்தனர். இந்த விலங்கு ஒரு ஆண் விலங்கு என்றும் ஆனால் இது நாய் அல்லது ஓநாய் ஆகிய இரண்டில் ஒன்றாக இருக்கலாம் என்றும் இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
மேலும் இது என்ன வகை விலங்கு என்பது தெரியாமலேயே டோகார் என்று செல்லமாக பெயர் சூட்டியுள்ளனர். டோகார் என்றால் தோழர் என்று அர்த்தமாம். இந்த விலங்கை கைப்பற்றி நன்றாக சுத்தம் செய்து அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சியாளர்கள் வைத்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தில் இந்த விலங்கை காண தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது