விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!!வாழ்க்கை முன்னேற்றமடையும் நாள்!

Photo of author

By CineDesk

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!!வாழ்க்கை முன்னேற்றமடையும் நாள்!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்னிக்கு இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் நீங்கள் எடுக்கும் காரியங்கள் எல்லாம் அற்புதமாக முடிந்து உங்கள் வாழ்க்கை முன்னேற்றமடையும். குடும்ப உறவு இன்றைக்கு சிறப்பாக உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை இன்றைக்கு பலப்படும். உத்தியோகம் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். தொழில் வியாபாரங்களில் எந்தவித குழப்பமும் இல்லை கூட்டாளிகள் அனுகூலமான அனுபவம் மிக்க ஆலோசனைகளை தருவார்கள். அரசியலில் இருக்கும் அன்பர்கள் முன்னேற்றமான சூழ்நிலைகளை காண்பார்கள்.

கலைத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு எடுத்த காரியம் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு தந்தை வழி அனுகூலங்கள் கிடைத்து வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வி சிறப்பாக அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுத்த காரியங்கள் திறம்பட செய்து முடித்து வெற்றியடைவார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு முயற்சிகள் கடினமாகும்.இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடையை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமான் வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.