விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

0
219
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் பரபரப்பாக வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள்‌. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக உங்கள் ஆற்றல் அதிகரிப்பதால் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அதிகரிக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொருளாதார நிலை உயரும் நாள்!
Next articleசர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் பிரியாணி இலை பயன்படுத்தும் முறைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here