சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் பிரியாணி இலை பயன்படுத்தும் முறைகள்

0
110

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் பிரியாணி இலை பயன்படுத்தும் முறைகள்! 

பெரும்பாலானவருக்கு மிகவும் பிடித்த உணவான பிரியாணியில் சுவையை கூட்டி கொடுப்பது பிரிஞ்சி இலை. இது ஏராளமான வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள். பட்டைஇலை, மலபார் இலை, லவங்கபத்திரி, என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. உணவிற்கு சுவையையும் மணத்தையும் மட்டும் தான் இந்த இலை கொடுக்கும் என்று நாம் நினைத்திருக்கிறோம். நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இந்த இலை மருந்தாக பயன்படும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

இந்த இலையில் பொட்டாசியம், தாமிரம், இரும்பு சத்து,  மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், உள்ளிட்ட ஏராளமான உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இத்தகைய இலையின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

1. நீரிழிவு நோய்: 

இந்த இலைகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளீசரைடு  அளவை குறைக்கிறது. இந்த இலையை பொடி செய்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.  டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

2. மூச்சுத்திணறல்:

ஒரு பாத்திரத்தில் பிரிஞ்சி இலைகளை போட்டு கொதிக்க வைத்து அதில் ஒரு துணியை நனைத்து மார்பின் மீது ஒத்தடம் கொடுத்து வர சுவாச பிரச்சனைகள் மற்றும் மூச்சு திணறலை குறைக்கும். சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் பிரிஞ்சி இலைகளை சேர்த்துக் கொள்வது நல்லது.

3. நோய் எதிர்ப்புசக்தி: 

‌‌                                  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின்ஏ, விட்டமின் பி, மற்றும் விட்டமின் சி ஆகியவற்றின் மூலமாக இது இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரும்.

4. செரிமானம்:

‌‌         நமது உடலின் செரிமான அமைப்பை பலப்படுத்தி வயிற்று வலியை குறைக்கிறது.

5.  மன ஆரோக்கியம்:

பல்வேறு மன குழப்பங்களால் டென்ஷன் ஏற்பட்டிருந்தால் பிரியாணி இலையை எரித்து அறையில் வைத்து அதன் புகையை முகர்ந்தால் மனதின் ஆரோக்கியம் மேம்படும்.

6.  கொலஸ்ட்ரால்:

‌‌‌‌.                    இதில் இதயத்திற்கு நல்லது என கருதப்படும் காஃபிக் கரிம கலவையும், மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும் உள்ளதால் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. மேலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் நிறைய உள்ளன.

பிரியாணி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து மூலிகை தேநீர் போல அருந்தலாம். அல்லது  டீயுடன் சேர்த்தும் அருந்தலாம்.