விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

0
188
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். எந்த ஒரு காரியத்திலும் கவனமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் பேசும் வார்த்தைகளில் கனிவுடன் செயல்படுவது நல்லது.

வருமானம் திருப்திகரமாக வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் ஆற்றல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில முக்கிய அதிரடி முடிவுகளை எடுப்பீர்கள் அதற்கு கூட்டாளிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஆற்றலுடன் வீர நடை போடுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்காக மாற்று மருத்துவத்தை அணுகுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleபுதினா இலையில் இத்தனை சீக்ரெட் இருக்கின்றதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் இனிமைகள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here