விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
185
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு தாராளமாக வந்து சேரும். கொடுத்த வாக்குரிகளை அருமையாக காப்பாற்றி வெற்றி பெறுவீர்கள்.

குடும்ப உறுப்பினர்களுக்காக சில அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். நிதி சிறப்பாக வருவதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு வந்து சேரும். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் உண்டாகும்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வங்கி இடம் கேட்டிருந்த உதவிகள் இன்றைய தினம் கண்டிப்பாக வந்து சேரலாம். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனின் அன்பைப் பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள்.

அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! சலசலப்புடனும் காணப்படுவீர்கள்!
Next articleஎப்பொழுதும் உடல் சோர்வாக உள்ளதா? உங்களுக்கு இந்த சத்து தான் குறைவாக இருக்கின்றது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here