எப்பொழுதும் உடல் சோர்வாக உள்ளதா? உங்களுக்கு இந்த சத்து தான் குறைவாக இருக்கின்றது!

0
131

எப்பொழுதும் உடல் சோர்வாக உள்ளதா? உங்களுக்கு இந்த சத்து தான் குறைவாக இருக்கின்றது!

உடலுக்குத் தேவையான இரும்புச்சத்துகளை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்களை இந்த பதிவின் மூலமாக காணலாம்

நம் உடலில் மிக முக்கியமான சத்துக்களில் இரும்பு சத்து முக்கியமானது. உடலில் புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கும் நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கக்கூடிய ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்வதற்கும் மிகவும் அவசியமான சத்து இரும்பு சத்து ஆகும்.

இரும்புச்சத்து குறைவாக இருந்தால் ரத்த சோகை ஏற்படும்.இந்த சோர்வானது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் அளவு இரும்பு சத்து குறைபாடு ஏற்படுகிறது.

பீன்ஸ் வகைகள்

பீன்ஸ் வகைகளான சோயா பீன்ஸ், கிட்னி பீன்ஸ், கொண்டைக்கடலை போன்றவற்றில் அதிக அளவு இரும்புச் சத்துக்களை கொண்டுள்ளது.

100 கிராம் சோயா பீன்ஸில் 7 கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. நாம் தினமும் சாப்பிடும் உணவுகளுடன் பீன்ஸ் வகைகளை எடுத்துக் கொண்டால் இரும்பு சத்து குறைபாட்டை குறைக்கலாம்.

கீரை வகைகள்:

கீரை வகைகளான முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்புச் சத்துக்கள் உள்ளது. மிக எளிதாக கிடைக்கக்கூடிய கீரை வகைகளாகவும் 100 கிராம் கீரையில் 4 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கின்றது.

இரும்புச்சத்து குறைபாட்டினால் அவதிப்படக்கூடியவர்கள் தினமும் சாப்பிடும் உணவுகளுடன் கீரை வகைகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு தினமும் உடலுக்கு தேவையான முத்துக்களை தரக்கூடிய உணவுகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

author avatar
Parthipan K