விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! தந்தையின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் நாள்!

0
231
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! தந்தையின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் நாள்!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தந்தையின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் நாள். சந்திர பகவான் பாகிஸ்தானத்தில் உள்ளதால் தந்தையின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல் விலகும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய புள்ளிகளாக மாறுவார்கள். கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தையின் மூலம் சில நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு தந்தையின் உதவிகள் தாராளமாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசர்க்கரையின் அளவு ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த இரண்டு இலைகள் இருந்தால் மட்டும் போதும்!
Next articleஎலும்பு தேய்மானத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த மாவை பாலில் கலந்து குடித்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here