விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!

0
215
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். இன்று தொலைபேசி மூலம் ஒரு வெளியூர் பிரயாணம் உண்டாகலாம். அதன் மூலம் உங்களுக்கு அலைச்சல் உண்டாகும்.

குடும்ப உறவுகள் என்று சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் குடும்ப உறவு பாதிக்காது. வருமானம் வந்து சேர்ந்தாலும் சில செலவுகளும் இருக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உருவாகலாம். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் கொடிகட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பத்துடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும். இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleகுங்குமப்பூ தினமும் இப்படி சாப்பிட்டு வாருங்கள்! உங்கள் உடம்பில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்!
Next articleநரம்புகளை பலப்படுத்தும் சிறந்த உணவுகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here