நரம்புகளை பலப்படுத்தும் சிறந்த உணவுகள்!

0
104

நரம்புகளை பலப்படுத்தும் சிறந்த உணவுகள்!

நரம்புகளின் பலவீனத்தை குறித்து நரம்புகளை ஆரோக்கியமாக மாற்றும் சிறந்த உணவுகள் பற்றி பார்ப்போம்.

நமது உடலில் தலைவலி, வலிப்பு, தலைச்சுற்றல், நரம்புத் தளர்ச்சி, கை கால் நடுக்கம், கழுத்து வலி, முதுகு வலி, தூக்கமின்மை, ஞாபக மறதி, கைகள் எரிச்சல், போன்றவை நரம்புகளின் பாதிப்புகளால் ஏற்படுகின்றன. மதுப்பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.

எனவே நரம்பு மண்டலம் பலமாக்க நாம் சாப்பிடும் உணவு வகைகளும் காரணம் ஆகின்றன.அத்தகைய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பார்ப்போம்.

1. திராட்சை
திராட்சையில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் ஆன்டிஆக்சிடென்ட்களும் நிறைய உள்ளன. விதைகள் உள்ள கருப்பு திராட்சை நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை பலமாகவோ அல்லது ஜூசாகவோ எடுத்துக் கொள்ளும் பொழுது நரம்பு செல்கள் வலுவிழத்தலை தவிர்த்து நரம்புகளில் வீக்கத்தை குறைக்கும்.

2. உலர் விதைகள்:
பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பூசணி விதை, போன்றவற்றை நரம்பு தளர்ச்சி நரம்பு பலவீனம் இருப்பவர்கள் இதனை தினம் ஒன்று சாப்பிட்டு வர நரம்பு பிரச்சனை இருப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் இரத்த அழுத்தம், இதய நோய், கண் பார்வை பிரச்சினைகளையும் சரி செய்யும். இந்த உலர் விதைகளில் ஒமேகா 3, மெக்னீசியம், விட்டமின் பி காம்ப்ளக்ஸ், விட்டமின் ஈ போன்ற நரம்புகளை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

3. மஞ்சள்:
நரம்புகளை ஆரோக்கியமாக வைப்பதற்கும், நரம்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கும் சிறந்த இயற்கை பொருள் மஞ்சள். மஞ்சளில் உள்ள இயற்கையான வேதிப்பொருட்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட் நரம்புகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், நரம்புகள் சேதமடைதலை தவிர்க்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை ஒரு துண்டு இஞ்சி தட்டி போட்டு அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் விட்டு நன்றாக கொதிக்க விட்டு மிதமான சூட்டில் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர நரம்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து நரம்புகளை பலப்படுத்தும்.

4. முளைகட்டிய பயறு, தானியங்கள்:
ராகி, கம்பு, காராமணி, கொள்ளு, கொண்டைக்கடலை, பாசிப்பயறு போன்ற முளைகட்டிய பயிர் வகைகளை உப்பு, மிளகுத்தூள் அல்லது தேன் கலந்து தினமும் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பட்டு வரும். மேலும் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், மற்றும் பிற விட்டமின்கள் அதிக அளவில் கிடைக்கிறது.

மேலே சொன்ன உணவுகள் மட்டுமல்லாமல் இன்னும் பிற நரம்புகளுக்கு வலுவாக்கும் உணவு வகைகளை தொடர்ந்து எடுத்து வர நரம்பு மண்டலம் நன்கு பலப்பட்டு சீராக இயங்கும்.