விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள்!!

0
213
#image_title

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள். களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சந்தோஷமாக சூழ்நிலைகள் அமையும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் கேட்டிருந்த உதவிகள் கண்டிப்பாக வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகள் தென்படும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமைய வேண்டும்.