விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் பிற்பகலுக்கு மேல் அழைச்சாலும் உண்டாகும் நாள்!!

0
54

விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் பிற்பகலுக்கு மேல் அழைச்சாலும் உண்டாகும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் பிற்பகலுக்கு மேல் அலைச்சலும் உண்டாகும் நாள். காலையில் அயன சயன ஸ்தானமாகிய போகம் ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். வருமானம் எந்த அளவிற்கு வருகிறதோ அதற்கு தகுந்தவாறு செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மற்றும் வியாபாரத்தை அபிவிருத்திச் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்க கூறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள்.

உதயத்தில் உள்ள பெண்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு இல்லத்தில் மணமகிழும் சம்பவம் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான வளர்ச்சி உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani