பள்ளியில் சாரணர் பயிற்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயின் காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு!

Photo of author

By Sakthi

தெற்கு ரயில்வே மற்றும் சென்னையில் உள்ள தொடர்வண்டி பெட்டி தொழிற்சாலைகளில் (ICF)scouts & guides பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணி ஆரம்பமாகியுள்ளது. தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பம் செய்வது, கல்வித் தகுதி, தேவை தொடர்பாக தற்போது தெரிந்து கொள்ளுங்கள்.

பயிற்சியின் பெயர் – scouts & guides quota Recruitment level 1 &level 2

காலிடங்கள்- ஐ சி எப் சென்னை 3 தெற்கு ரயில்வே 14

வயது – 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் opc பிரிவினருக்கு மூன்று வருடங்களுக்கும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு தல 5 வருடங்களுக்கும் சலுகை வழங்கப்படும்.

சம்பளம்– ரயில்வே விதிமுறைப்படி வழங்கப்படும்

கல்வி தகுதி – பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சாரண சாரணியர் தகுதி

மேற்கண்ட கல்வி தகுதியுடன் சாரண, சாரணியர் அமைப்பில் குறைந்தது 5 வருடங்கள் உறுப்பினராக இருந்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு தேசிய அளவில்/ மாநில அளவில் நடைபெற்ற இரண்டு சாரன, சாரணியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

எழுத்து தேர்வில் பெரும் மதிப்பெண்கள் மற்றும் சாரண, சாரணியர் அமைப்பில் விண்ணப்பதாரரின் அனுபவம் சாதனைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்

General/ ஓ பி சி பிரிவினருக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பி டபுள்யூ டி பிரிவினர்கள் பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினருக்கு 250 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த விண்ணப்ப கட்டணத்தை DD அல்லது IPO என்று செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்த வேண்டிய முகவரி

தலைவர், ரயில்வே ரெக்ரூட்மெண்ட் செல் சென்னை

www.rrcmas.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட வேலை வாய்ப்பு, அறிவியல் மற்றும் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றுகளின் அசல் நகல்களை இணைத்து 8-11 2022 தேதிக்கு முன் தபாலில் அனுப்ப வேண்டும்.