இந்திய சுதந்திரத்திற்காக பல போராட்ட வீரர்கள் தங்களுடைய உயிர்களை துச்சமாக எண்ணி நமக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ளனர். அவற்றில் சில முக்கியமானவர்களின் வாழ்க்கை வரலாறானது படமாக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வாழ்க்கை வரலாற்று படங்களையே இந்த பதிவில் நாம் காண போகிறோம்.
படத்தின் பெயர் : கப்பலோட்டிய தமிழன்
ஆண்டு : 1961
வாழ்க்கை வரலாறு : VO சிதம்பரம் பிள்ளை
குறிப்பு : 9வது தேசிய திரைப்பட விருதுகளில் , கப்பலோட்டிய தமிழன் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது பெறப்பட்டது.
படத்தின் பெயர் : பெரியார்
ஆண்டு : 2007
வாழ்க்கை வரலாறு : பெரியார்
குறிப்பு : 1929 இல், செங்கல்பட்டில் நடந்த முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் ராமசாமி தனது பெயரிலிருந்து நாய்க்கர் என்ற சாதிப் பட்டத்தை நீக்குவதாக அறிவித்தார்.
படத்தின் பெயர் : பாரதி
ஆண்டு : 2000
வாழ்க்கை வரலாறு : மகாகவி சுப்பிரமணிய பாரதி
குறிப்பு : இத்திரைப்படம் 2000 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
படத்தின் பெயர் : காமராஜ்
ஆண்டு : 2004
வாழ்க்கை வரலாறு : படிக்காத மேதை காமராஜர்.
குறிப்பு : கதை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய காலம், காமராஜின் குழந்தைப் பருவம், சத்தியமூர்த்தியின் செல்வாக்கு, ஒரு அரசியல்வாதியாக காமராஜின் வளர்ச்சி மற்றும் அவரது சிறை வாழ்க்கை ஆகியவற்றை சித்தரிக்கிறது.
படத்தின் பெயர் : ரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர்
ஆண்டு : 2011
வாழ்க்கை வரலாறு : ராமாபாய் அம்பேத்கர்
குறிப்பு : எத்தனை இன்னல்கள் வந்தாலும், இரமாபாய் தன் கணவனை உந்துதலாக வைத்துக் கொண்டு, நாட்டின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை உயர்த்தும் தன் கணவனின் பணிக்குப் பின்னால், ஒரு பாறை போன்று உறுதுணையாக நின்றார்.
படத்தின் பெயர் : கேரள வர்மா பழசி ராஜா
ஆண்டு : 2009
வாழ்க்கை வரலாறு : பழசி ராஜா
குறிப்பு : இது எட்டு கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் ஏழு பிலிம்பேர் விருதுகள் தென்னக உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றது .