குமரியில் கடல் சீற்றம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! குமரி மக்களே உஷார்!

0
130

குமரியில் கடல் சீற்றம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! குமரி மக்களே உஷார்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடலோரப் பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி வலியுறுத்துகின்றது.

தமிழகத்தில் சில நாட்களாகவே நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மிகுந்த மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது பழைய நிலைக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதேபோல் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் பயங்கரமான நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கன்னியாகுமரி பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தி வருகிறது.

Previous articleகொரோனா தந்த புது வாழ்வு!! கடந்த 4 மாதங்களில் இரட்டிப்பு லாபம் அளித்த ஹெல்த்கேர் பங்குகள்!!
Next articleமத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு ! ப.சிதம்பரம் காட்டம் !