வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!

0
97
Sealing of houses and shops! Food safety department action!
Sealing of houses and shops! Food safety department action!

வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!

சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து கடந்த வாரம் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு உணவு பாதுகாப்பு அலுவலக சிவலிங்கம், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது செவ்வாபேட்டை, சந்தைப்பேட்டை ஆட்டோ நிறுத்தும் அருகில் பழனியம்மாள் (வயது 55)என்பவர் வீடு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.  இத்தகவல் கிடைத்த உடனே போலீசார் மற்றும் உணவுத்துறை பாதுகாப்பு அலுவலர் வீடு மற்றும் கடை ஆய்வு செய்தபோது கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பழனியம்மாள் கைது செய்து அவரது வீடு மற்றும் கடைஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர்.

இதே போல் அன்னதானப்பட்டி நரசிம்மன் ரோடு பகுதியில் கதிரேசனின் மளிகை கடை எம். கொண்டலாம்பட்டி இரும்பாலை மெயின் ரோட்டில் வெங்கடாஜலம் (வயது 66) என்பவரின்  கடையை ஆய்வு செய்தனர். ஆய்வு செய்தபோது அவரது  பீடா கடையை பூட்டி சீல் வைத்தனர். இதுபோல் தளவாய்பட்டியில் வைரமணி (வயது 23) என்பவரின் பீடா கடையும் போலீசார் நேற்று சீல் வைத்தனர். இதில் செவ்வாபேட்டை உட்பட்ட பல்வேறு இடங்களில் ஆறு கடைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்ததாக தகவல் கிடைத்தது. இது  தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர்கள் கைது குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து புகையிலை பொருட்களை  விற்பனை செய்த நபர்களின் கடையும் பூட்டு சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த புகாரில் அடிப்படையில் நேற்று இரவு ஒரு வீடு  உள்பட ஆறு கடைகளை பூட்டி சீல் வைத்துள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்தனர்.

author avatar
CineDesk