யுவனை எருமைமாடுடன் ஒப்பிட்ட சீமான்! வைரலாகும் விமர்சனம்!
இளையராஜா சமீபத்தில் ஓர் புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதியுள்ளார்.அந்த முன்னரை தான் தற்போது தமிழ்நாடு முழுவதும் தீயாக பரவி வருகிறது.பலர் அந்த முன்னுரைக்கு ஆதரவையும் பலர் எதிர்ப்பையும் தெரிவித்தும் வருகின்றனர்.இவர் அந்த முன்னுரை பக்கத்தில்; கூறியது,பிரதமர் மோடி மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை எடுத்து வருகிறார்.அவரின் தலைமையில் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.இந்தியாவின் உள்கட்டமைப்புக்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.மோடியின் முத்தலாக் தடையை கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார்.
அம்பேத்கரும் மோடியும் இந்தியாவினை குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என இவ்வாறு ஒப்பிட்டு கூறியுள்ளார்.இந்த முன்னரை குறித்து புத்தகம் வெளியே வந்தது முதல் இது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.நடிகை குஷ்பூ இளையராஜ-விற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருத்து சுதந்திரம் இல்லையா என்று கேள்வி எழுப்பி இருந்தது குறிபிடத்தக்கது.இது போல் பலர் இவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசினர்.இதுகுறித்து இளையராஜாவும் விரிவான அறிக்கையும் அளித்தது குறிபிடத்தக்கது.இந்த சர்ச்சையே தற்போது வரை முடிவரா நிலையில் அவரது மகன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருப்பு திராவிடம் பெருமைமிகு தமிழன் என்று கூறி, கருப்பு வேஷ்டி அணிந்த படி புகைப்படம் போட்டுள்ளார்.
இது தற்போது பேசும் பொருளாக உள்ளது.இதுகுறித்து சீமான் விமர்சனம் கிண்டல் செய்துள்ளார்.அவர் கூறியது,யுவன் கருப்பாக இருப்பதால் கருப்பு திராவிடம் ஆகி விட முடியாது.ஒன்று திராவிடானாக இரு.இல்லையென்றால் தமிழனாக இரு.எருமை கூட தான் கருப்பாக இருக்கு.அது திராவிடனா? என கேள்வி எழுப்பியுள்ளார்.யுவன் தம்பி நீங்கள் குழப்பாமாக உள்ளீர்.முதலில் தெளிவாக இருங்கள் என கூறினார்.மேலும் அவர் கூறியது,யுவன் சின்னபிள்ளை அவருக்கு ஏதும் தெரியவில்லை,அவரை விட்டுவிடுங்கள் என கூறினார்.தற்போது வெளிவந்த கே.ஜி.எப் படத்தின் நடிகர் யாஷ்,நான் கன்னடனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறினார்.அதுபோல நீங்களும் கூற வேண்டியது தானே என சீமான் விமர்சனம் செய்தார்.