இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி!! முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 339 ரன்கள் குவிப்பு!!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது கிரிக்கெட் போட்டி நேற்று அதாவது ஜூன் 28ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து…
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக மொயின் அலி விளையாடவில்லை. மொயின் அலிக்கு பதிலாக இளம் வீரர் ஜோஸ் தங் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்…
இதையடுத்து ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் க்வாஜா களமிறங்கினர்.
வார்னர் அரைசதம்…
தொடக்க வீரர் உஸ்மான் க்வாஜா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து விளையாடிய டேவிட் வார்னர் அரைசதம் அடித்தார். டேவிட் வார்னர் அரைசதம் அடித்து 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஸ்டீவ் ஸ்மித் நாட் அவுட்…
டேவிட் வார்னரை தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபச்சானே 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஸ்டீவ் ஸ்மித் அவர்கள் தொடர்ந்து விளையாடி அரைசதம் அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த டிராவியாஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
மூன்று வீரர்கள் அரைசதம்…
நேற்று தொடங்கிய ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்(66 ரன்கள்), டிராவியாஸ் ஹெட்(77 ரன்கள்) இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்து 89 ரன்கள் எடுத்து ஆட்டடமிழக்காமல் உள்ளார்.
முதல் நாளில் சிறப்பான ஆட்டம்…
முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் சேர்த்துள்ளது.
இங்கிலாந்து பந்துவீச்சு…
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசி ஜோ ரூட் மற்றும் ஜோஸ் தங் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஒலி ராபின்சன் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் சாதனைகள்…
இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில இரண்டு முக்கிய வீரர்கள் சாதனைகளை படைத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சாளர் நேதன் லயன் தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார். அதே போல குறைந்த போட்டிகளில் அதி வேகமாக 9000 ரன்களை(174 போட்டிகள) கடந்து ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணியில் ஆஷஸ் தொடரில் 50 விக்கெட்டுகளை கடந்த விக்கெட் கீப்பர்களில் ஜானி பேரிஸ்டோ அவர்களும் இடம் பிடித்துள்ளார்.