சாண்டி முதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம்! திருமணத்திற்கு செல்வாரா மாஸ்டர்!

Photo of author

By Rupa

சாண்டி முதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம்! திருமணத்திற்கு செல்வாரா மாஸ்டர்!

இந்த கொரோனா தொற்று காலத்திலிருந்து மக்கள் தற்பொழுது தான் மீண்டு வருகின்றனர்.இந்த வேளையில் பலவித திருமண நிகழ்வுகள் நடந்து வருகிறது.அந்தவகையில் தற்போது சாண்டியின் முதல் மனைவிக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடக்கயிருக்கிறது..சாண்டி மாஸ்டர் என்று அழைக்கப்படும் சாண்டி முதன் முதலாக கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் கலந்துக்கொண்டார்.அதனையடுத்து அதிகளவு பிரபலமடைந்தார்.கெத்து,சண்டக்கோழி 2 போன்ற படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார்.

இவ்வாறு பிரபலமடைந்து வரும் நிலையில் முதலாவதாக காஜல் பசுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.காஜல் பசுபதியும் பல திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஓரிரு வருடங்களிலேயே விவகாரத்து செய்து கொண்டனர்.அதனையடுத்து சில காலம் கழித்து சாண்டி மாஸ்டர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பல ரசிகர்களை வென்றார்.அதனையடுத்து இவர் முதலாவது திருமணம் செய்த காஜல் பசுபதி தற்போது இரண்டாவது திருமனத்திற்கு தயாராக உள்ளதாக தனது வலைத்தள பக்கத்தில் அவரே பகிரங்கமாக கூறியுள்ளார்.அவருக்கு நிச்சயம் முடிந்ததாகவும் தனது வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் யாரையும் நிச்சியத்திற்கு அழைக்க முடியவில்லை.கண்டிப்பாக திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பேன் என்றும் கூறினார்.அவரது வருங்கால கணவர் பற்றி கூறுகையில்,அவர் கலகலப்பு 2 படத்தில் நடித்தவர் மற்றும் பிக்பாஸில் கலந்துக்கொண்டவர் தான் எனவும் கூறுகின்றனர்.இவரது திருமணத்திற்கு முதல் கணவரான சாண்டி மாஸ்டர் செல்வரா என காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.