தயாரிப்பாளருடன் இரண்டாவது திருமணம்!  உண்மையை கூறிய நடிகை பிரகதி !!

Photo of author

By Sakthi

தயாரிப்பாளருடன் இரண்டாவது திருமணம்!  உண்மையை கூறிய நடிகை பிரகதி
பிரபல தெலுங்கு நடிகை பிரகதி தயாரிப்பாளர் ஒருவருடன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் அந்த தகவல்களுக்கு நடிகை பிரகதி தற்பொழுது  முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான வீட்ல விஷேசங்க என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிகை பிரகதி அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறப்பாக நடித்த நடிகை பிரகதி ரசிகர்களின் கவனம் பெற்றார்.
பெரும்பாலும் குணச்சித்தர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த பிரகதிக்கு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து அங்கும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
நடிகை பிரகதி அவர்கள் 20 வயதிலேயே ஐடி ஊழியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வந்த பிரகதி அவர்களுக்கும் அவருடைய கணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து நடிகை பிரகதி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பிரகதி அவ்வப்போது லேட்டஸ்ட் பாடல்களுக்கு நடனம் ஆடும் வீடியோ, பிட்னஸ் வீடியோ ஆகியவற்றை பதிவிடுவார். இந்நிலையில் தற்பொழுது 47 வயதாகும் பிரகதி அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று தகவல்கள் பரவி வந்தது.
அதாவது நடிகை பிரகதி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இந்த தகவல்களுக்கு நடிகை பிரகதி அவர்கள் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உண்மையை என்ன என்பதை கூறியுள்ளார்.
அதாவது இந்த தகவல்களை பார்த்து கடுப்பான நடிகை பிரகதி “ஊடகங்களில் பரவும் தகவல்கள் செய்திகள் அனைத்தும் உண்மை இல்லை. இது போன்ற ஆதாரம் இல்லாமல் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.