வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் !?

0
39
#image_title
வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம்
உலகக் கோப்பை தொடரின் இன்று(அக்டோபர்31) நடைபெறவுள்ள லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியும் வங்கதேச அணியும் விளையாடவுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகின்றது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றது. இதில் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் தோல்வி பெற்ற இங்கிலாந்து அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து உலகக் கோப்பை தொடருக்கான அரையிறுதி சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
அதே போல ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் இந்திய அணியுடனான தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணி தோல்வியில் இருந்து மீள முடியாமல் தடுமாறி வருகின்றது.
மேலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதில் சந்தேகம் நிலவி வருகின்றது. பாகிஸ்தான் அணி  விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
அதே போல மறுபுறம் வங்கதேச அணி நடப்பு உலகக் கோப்பை தொடரின் படு மோசமாக விளையாடி வருகின்றது. இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம் 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. மேலும் 5 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் வங்கதேச அணியும் பாகிஸ்தான் அணியும் இன்று(அக்டோபர்31) நடைபெறும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. இந்த போட்டி வழக்கம் போல மதியம் இரண்டு மணிக்கு தொடங்குகின்றது. மேலும் பாகிஸ்தான் மற்றும் வங்க தேசம் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுவரை 38 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் பாகிஸ்தான் 33 வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது இன்று(அக்டோபர்31) நடைபெறும் ஒருநாள் போட்டி வடிவிலான உலகக் கோப்பை தேரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. அதேபோல உலகக்கோப்பையில் இரண்டு அணிகளும் இரண்டு முறை மோதியுள்ளது
இதில் பாகிஸ்தான் அணி ஒருமுறையும் வங்கதேச அணி ஒருமுறையும் மோதியுள்ளது.