பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!! பயன்பாட்டிற்கு வரும் மடிக்கணினி!!

0
149
second-phase-govt-school-teachers-scheme-to-provide-laptops
second-phase-govt-school-teachers-scheme-to-provide-laptops

தமிழக அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது பள்ளிகல்வித்துறை. அந்த வகையில்  தற்போது உள்ள கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்லேட்) வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் டேப்லேட் கொள்முதல் செய்யப்பட்டு அதனை ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு (2023-2024) முதல் முறை முதற்கட்டமாக ரூ.101.48 கோடி மதிப்பிலான டேப்லேட்கள் ஆரம்ப பள்ளிகளில் பணிபுரியும் 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கபட்டன. இதற்கு ஆசிரியர்களுக்கு இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது இது எங்கள் கற்பித்தல் முறையின் திறனை மேம்படுத்தி கொள்ள உதவியாக உள்ளது என கூறினார்.

இந்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் 55,478 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் பணிகள் பாடநூல் கழகத்தின் மூலம்  தீவிரமாக  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில்  இவை ஆசிரியரின் பயன்பாட்டுக்கு வரும் என பள்ளிகல்வி துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Previous articleஉடலில் அனைத்து நோய்களையும் குணமாக்கும் இலை!! தினமும் இரண்டு சாப்பிட்டால் மருத்துவரை நாட தேவையில்லை!!
Next articleதிட்டமிட்ட தேதியில் 10,11,12 ம் வகுப்புகளுக்கான  பொதுத்தேர்வு நடைபெறுமா ?? வெளியான புதிய தகவல்