இம்மாதம் 11 ஆம் தேதி இரண்டாம் சுற்று கலந்தாய்வு! கல்லூரிகளை மாற்ற விரும்புவோரும் பங்குபெறலாம்!
தமிழகத்தில் சித்தா,ஆயுர்வேத யுனானி.ஹோமியோபதி ஆகிய படிப்புக்ளுக்கு ஐந்து அரசு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த கல்லூரிகள் மொத்தம் 330 இடங்கள் இருக்கின்றது.அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றது.அதுபோலவே 26 தனியார் கல்லூரிகளில் 1990 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது.
அதில் மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம், மாநில அரசிற்கு 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு உள்ளது.நடப்பாண்டில் அரசு ஒதுக்கீடு நிர்வாக ஒதுக்கீடு,தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தப்பட்டது.அந்த கலந்தாய்வில் அரசு கல்லூரிகளில் 24 சித்தா இடங்கள்.3 ஆயுர்வேத இடங்கள்,7 ஹோமியோபதி இடங்கள்,27 யுனானி இடங்கள் நிரப்பப்படவில்லை .
மேலும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 272 ஹோமியோபதி இடங்கள் 54 ஆயுர்வேத இடங்கள் மற்றும் 27 சித்தா இடங்கள் காலியாக இருக்கின்றது.அதுமட்டுமின்றி அகில இந்திய ஒதுக்கீட்டிலும் 127 இடங்கள் நிரம்பாமல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக உள்ள 521 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 503 இடங்கள் காலியாக உள்ளது.மொத்தம் 1041 இடங்கள் நிரம்பாமல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இடங்கள் அனைத்திற்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 11 ஆம் தேதி சென்னை அரும்பாக்கம் இந்திய மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது.இந்த கலந்தாய்வில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு முதல் சுற்றில் பங்கேற்று கல்லூரிகளில் இடங்களை பெற்று அதனை மாற்ற விரும்புபவர்களும் பங்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.