உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து இரண்டாவது தோல்வி!!! புள்ளிப்பட்டியலில் பாதளத்திற்கு சென்ற ஆஸ்திரேலியா!!!

0
107
#image_title

உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து இரண்டாவது தோல்வி!!! புள்ளிப்பட்டியலில் பாதளத்திற்கு சென்ற ஆஸ்திரேலியா!!!

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி நேற்று(அக்டோபர்12) நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி பெற்றதால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது தோல்வியை சந்தித்த நிலையில் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 9வது இடத்திற்கு சென்றுள்ளது.

லக்னோவில் நேற்று(அக்டோபர்12) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் குயின்டன் டிக்காக் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததால் 50 ஓவர்களில் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியில் சதம் அடித்த குயின்டன் டிக்காக் 109 ரன்கள் சேர்த்தார். மார்க்ரம் அரைசதம் அடித்து 56 ரன்களும் பவுமா 35 ரன்களும் சேர்த்தனர்.

கிளாசன் 29 ரன்களும், வாண் டர் டுசேன், மார்கோ ஜன்சென் ஆகியோர் தலா 26 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட், ஜாம்பா, கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து 311 ரன்கள் இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் எதிர்பார்த்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மார்ஸ் லபச்சாக்னே மட்டும் 46 ரன்கள் சேர்த்தார். மிட்செல் ஸ்டார்க் 27 ரன்களும், கம்மின்ஸ் 22 ரன்களும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

தென்னாப்பிரிக்கா அணியில் காகிசோ ரபாடா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேசவ் மஹராஜ், டப்ரியாஷ் ஷம்சி, மார்கோ ஜன்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் லுங்கி இங்கிடி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். தென்னாப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பல முறை சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா சந்திக்கும் இரண்டாவது தோல்வி இதுவாகும். முதல் போட்டியில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்கா அணியுடன் போட்டியிலும் தோல்வி பெற்றதையடுத்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு ஆஸ்திரேலியா அணி சென்றுள்ளது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Previous articleகுழந்தைகளின் பேவரைட் டீ கடை “கஜாடா”..  இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்!!
Next articleநாளை மாகாளைய அமாவாசை தினம்!!! இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என்று அறிவிப்பு!!!