PMK: பாமகவில் சமீப காலமாக அப்பா மகன் இருவருக்குமிடையே பனிப்போரானது முடிவடைந்த பாடில்லை. பொது நிகழ்ச்சி ஒன்றில் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வழங்கி இக்கட்சியை குடும்ப அரசியலாக்குவதா என அன்புமணி கூறியது சர்ச்சையானது. இதற்கு முக்கிய காரணம் ராமதாஸ் மகள் வழி பேரனுக்கு இளைஞர் அணித் தலைவர் பதவி கொடுத்தது தான்.
பிறகு சமாதானம் செய்து கட்சி சுமுகமாக சென்ற நிலையில் திடீரென்று ராமதாஸ், நான்தான் கட்சியின் தலைவர் அன்புமணி கிடையாது என அறிவிப்பை வெளியிட்டார். இது ரீதியாக அப்போதையிலிருந்தே இதற்குப் பின்னணியில் இருப்பது ஜிகே மணி தான் என பலரும் கூறினர். ஏனென்றால் முதலில் தலைவராக இருந்தது இவர்தான்.
பின்பு அன்புமணி தலைவராக்கி இவருக்கு கௌரவ தலைவர் என்ற பதவி கொடுக்கப்பட்டது. பின்பு இளைஞர்கள் அணி தலைவர் பதவியை ஜிகே மணி மகனான தமிழ் குமரனுக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இவரே பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இதற்கு முக்கிய காரணம் அன்புமணி ரீதியாக இவருக்கு கொடுத்த அழுத்தம் தான் என கூறினர். ஜிகே மணி இதனையெல்லாம் நினைத்துதான் தற்பொழுது ராமதாஸ் பின்னணியிலிருந்து கொண்டு பலி வாங்குகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
அதேபோல இவர் திமுகவுடன் ரகசிய கூட்டணியில் இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கலைஞர் உள்ளிட்டோரை புகழ்ந்துறைத்துள்ளார். இவ்வாறு ஜிகே மணி செய்தது பாமகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக இருந்த ஆட்சிக் காலத்திலேயே வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய 10.5 சதவீதம் இட ஒதுக்கிடானது கிடைத்தும், திமுகவால் தான் செயல்படுத்த முடியாமல் போனது.
தற்போது வரை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மத்திய அரசை குறை கூறி வருகின்றனர். இப்படி திமுக வன்னியர்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் ஏன் புகழாரம் சூட்டியுள்ளார்?? நாளடைவில் திமுகவுடன் இணைய போகிறாரா என பலரும் கேட்டு வருகின்றனர். மேற்கொண்டு இவ்வாறு அவர் பேசியதற்கு கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என சோசியல் மீடியாவில் இவருக்கு எதிராக கண்டனம் எழுந்துள்ளது.