ஓட்டலில் நடந்த ரகசிய மீட்டிங்! அடுத்த முதல்வர் யார்?

Photo of author

By Rupa

ஓட்டலில் நடந்த ரகசிய மீட்டிங்! அடுத்த முதல்வர் யார்?

புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்மன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில் அங்கு தொகுதி பங்கீடு பிரச்சனை நிலவி வருகிறது.அந்த வகையில் பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்,அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு துவங்கியுள்ளது.என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் போட்டியிடும் ரங்கசாமி தன்னை முதலவர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதை ஒப்புக்கொண்ட பாஜக அதிகார பூர்வமான தகவல்களை வெளியிடாமல் இருந்தது.

இவர்கள் இவ்வாறு காலம் தாமதம் ஆக்கி கொண்டிருந்த காரணத்தினால் ரங்கசாமி அவர்களுக்கு சந்தேகம் எழத்  தொடங்கியது.இந்நிலையில் அமைச்சர் பதவியை ராஜினமா செய்து பாஜகவில் கூட்டணி சேர்ந்த நமசிவாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க போவதாக ரங்கசாமி சந்தேகம் அடைந்தார்.இவ்வாறு இவர்கள் செய்த காரியம் ரங்கசாமியை அதிருப்தி அடைய செய்தது.ஆகையால் பாஜக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிட போவதாக முடிவு எடுத்தார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து தனியார் ஓட்டலில் மீட்டிங் நடத்தினார்.இந்த ஆலோசனையானது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.ஆலோசனையின் முடிவில் அனைவரும் ஒருமித்த கருத்தாக தனித்து போட்டியிடலாம் என முடிவெடுத்தனர்.இவர்களின் அறிவிப்பை கண்ட பாஜக தேர்தல் பொறுப்பாளர் மற்றும் அமைச்சருமான அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் இணை பொறுப்பாளர் சந்திரசேகர்,நிர்மல்குமார் ஆகியோர் புதுச்சேரி வந்தனர்.

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை நிர்மல்குமார் சுரானா நேற்று மாலை சந்தித்தார்.இவர்களின் சந்திப்பு தனியார் ஓட்டலில் நடைபெற்றது.இவர்களின் சந்திப்பானது 15 நிமிடங்களையும் கடந்து நடை பெற்றது.ரங்கசாமி நிர்மல்குமார் சுரானாவிடம் அதிகாரபூர்வமாக தன்னை முதல்வர் வேட்பாளருக்கு அறிவிக்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அறிவித்தால் தொகுதி பங்கீட்டில் விட்டுகொடுக்க தயாராக உள்ளேன் என ரங்கசாமி கூறினார்.தங்கள் தலைமையிடம் பேசிவிட்டு மீண்டும் உங்களை சந்திப்பதாகவும் அவசரப்பட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என நிர்மல்குமார் சுரானா ரங்கசாமியிடம் கேட்டுக்கொண்டார்.

இவர்களின் ஆலோசனை முடிந்து வெளியே வந்து நிர்மல்குமார் சுரானா செய்தியாளர்களிடம் கூறியது,பாஜக கூட்டணியில் தான் என்.ஆர்.காங்கிரஸ் இருக்கிறது.தற்போதைய பேச்சு சுமுகமாக நடந்துள்ளது எனக் கூறினார்.