நடிகை கயல் ஆனந்திக்கு ரகசிய திருமணம்?!

Photo of author

By Parthipan K

கயல் ஆனந்தி 2012ஆம் ஆண்டு பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பிரியத்தமா நீவசட குசலமா, கிரீன் சிக்னல் போன்ற தெலுங்கு படங்களில் நடத்தார். 2014ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக பொறியாளன் என்ற படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் இமான் இசையில் கயல் சந்திரனுக்கு ஜோடியாக கயல் படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இப்படத்தின் பாடல்களும் மெஹா ஹிட் ஆகின. கயலுக்கு பிறகு விசாரணை, சண்டிவீரன் , திரிசா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய் போன்ற படங்களில் நடித்தார்.

2018ஆம் ஆண்டு இயக்குநர் ரஞ்சித் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிருக்கு ஜோடியாக பரியேரும் பெருமாள் திரைப்படத்தில் நடித்தார்.இப்படம் அவருக்கு மீண்டும் ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. சரிந்த தனது மார்க்கெட்டை மீண்டும் ஓரளவு நிலைநிறுத்த ஆரம்பித்தார்.

பெரிய படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்தாலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கதான் செய்கிறது. கனிசமான படங்கள் அவர் கைவசம் உள்ள நிலையில் ஆனந்திக்கு திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தமாகதான் இருக்கும்

மேலும் சாக்ரடீஸ் என்பவருடன் இவருக்கு ரகசிய திருமணம் நடக்க இருக்கிறதாம். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பாரா இல்லையா என பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.