படப்பிடிப்பு தளத்தில் தனது தந்தையைக் காண அனுமதிக்காத செக்யூரிட்டி!! பொறுமையாக காத்திருந்த பிரபல நடிகர் மகன்!!

0
90

தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வரக்கூடிய செய்தியானது, பிரணவ் மோகன்லால் பிரிட்டானில் நடைபெற்றுக் கொண்டிருந்த அவருடைய தந்தையின் சூட்டிங்கில் அவரை காண சென்று பொழுது செக்யூரிட்டி அவரை உள்ளே அனுமதிக்கவில்லை என்பதாகும்.இது குறித்த விரிவான செய்தியை இந்த பதிவில் காண்போம்.

 

சமீபத்தில் பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆலப்பி அஷ்ரஃப் பிரணவ் குறித்து பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் :-

 

ஸ்பெயினில் படமாக்கப்பட்ட மோகன்லால் இயக்கிய பரோஸ் திரைப்படத்தின் செட்டில் இருந்தபோது பிரணவ் தனது தந்தையைச் சந்திக்க வந்துள்ளார். ஆனால் அந்த இடத்தில் பிரணவ் யார் என்று அறியாத செக்யூரிட்டி, யாரையும் செட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதனால் உள்ளே விடமுடியாது என்று அவரைத் தெரியாமல் கூறியுள்ளார்.பாதுகாவலருக்கு அவரை  யார் என்று சரியாக அடையாளம் தெரியவில்லை. காரணம் அவரின் எளிமை.

 

அவரது வருகை குறித்து கேட்டபோது, பிரணவ் தனது தந்தையைப் பார்க்க வந்ததாக விளக்கினார். இருந்த போதிலும், எந்த சூழ்நிலையிலும் உள்ளே நுழைய அனுமதி இல்லை என்று செக்யூரிட்டி அவரிடம் தெரிவித்தார். பிரணவ் அமைதியாக சிரித்துக்கொண்டே வாக்குவாதம் செய்யாமல் அப்படியே நின்றுள்ளார்.

 

பிரணவ் மோகன்லால் எவ்வாறு நின்று இருப்பதை கண்ட செக்யூரிட்டி உண்மையாகவே இவரது தந்தையை தான் காண வந்திருப்பாறோ என்று சந்தேகத்தில் படப்பிடிப்பு தளத்திற்குள் சென்று அங்கிருந்த டீமிடம் தெரிவித்திருக்கிறார்.

 

பின்பு அங்கு இருந்த போட்டோகிராஃபர் அனீஸ் பிரணவை அடையாளம் கண்டு செக்யூரிட்டியிடம் கூறியுள்ளார். தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆலப்பி அஷ்ரஃப் இதுகுறித்து கூறியதற்கு காரணம் பிரணவ் எவ்வள்வு எளிமையானவர் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் படி கூறியிருக்கிறார்.

 

ஏற்கனவே, பிரணவ் தற்போது ஸ்பெயினில் உள்ள ஒரு பண்ணையில் ‘ஒர்க் அவே’ திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அங்கு பணத்திற்கு பதிலாக உணவு மற்றும் தங்குமிடத்திற்கு ஈடாக வேலை செய்வதாகவும் காசு பணத்தை விட இதுபோன்ற அனுபவங்களை பிரணவ் விரும்புகிறார் என்றும் தற்போது குதிரைகள் மற்றும் ஆடுகளை பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் சுசித்ரா தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleடாஸ்மாக் கடைகளுக்கு விடப்பட்ட 3 நாள் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!
Next articleJio நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்!! வெறும் 50 ரூபாயில் 800 TV சேனல்கள்.. 13 OTT!!