திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை! பக்தர்கள் குற்றச்சாட்டு!!

0
244
#image_title
திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை! பக்தர்கள் குற்றச்சாட்டு!
இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவிலாக இருக்கும் திருமலை திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தியாவில் புனித தலமாக இருக்கும் திருப்பதியில் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக மலைக்கு மேல் அனுப்பப்படுகின்றனர். அங்கு வரும் பக்தர்களின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு பிறகே கொடுக்கப்படுகின்றது. வாகன்ஙகள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்கு பிறகே மலைக்கு மேல் அனுப்பப்படுகின்றது.
இந்நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ஒரு கடையில் இருந்து மது பாட்டில்களை விஜிலென்ஸ் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர். கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்பவர் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
இதற்கு மத்தியில் நேற்று அதாவது மே 21ம் தேதி 5 வாலிபர்கள் காரில் திருப்பதிக்கு வந்தனர். அந்த காரின் முன்பகுதியில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் கொடி கட்டப்பட்டிருந்தது. இந்த கொடியை அகற்றாமல் பிதுகாப்பு அதிகாரிகள் திருமலைக்கு அந்த காரை அனுமதித்தனர்.
கடந்த மார்ச் மாதம் திருமலையில் கஞ்சா விற்பனை, கடந்த மாதம் பயங்கரவாதிகள் மிரட்டல், அனுமதியை மீறி கோவில் உள்ளே செல்போனை கொண்டு சென்று வீடியௌ எடுத்து வெளியிட்டது, தற்போது கோவில் அருகே கடையில் மது பாட்டில்கள் சிக்கியது, நேற்று கட்சிக் கொடியுடன் திருமலைக்கு காரை அனுப்பியது போன்ற காரணங்களால் பக்தர்கள் திருப்பதியில் பாதுகாப்பு குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
திருமலை மீது பீடி, சிகரெட், மது, மாமிசம், வாகனங்களில் வேற்று பதம் சார்ந்த ஸ்டிக்கர்கள், பேனர்கள், சாமி படங்கள், கட்சி கொடிகள் கெண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ள இந்த புனித தலத்தில் மேற்சொன்ன நிகழ்வுகள் நடக்காமல் இருக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
Previous articleவித்தியாசமான முறையில் இந்திய பிரதமருக்கு வரவேற்பு! பப்புவா நியூ கினியா பிரதமர் செய்த செயல்!!
Next articleஅனைத்து வரிகளும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்!! தமிழக அரசு அறிவிப்பு!!