வித்தியாசமான முறையில் இந்திய பிரதமருக்கு வரவேற்பு! பப்புவா நியூ கினியா பிரதமர் செய்த செயல்!!

0
129
#image_title
வித்தியாசமான முறையில் இந்திய பிரதமருக்கு வரவேற்பு! பப்புவா நியூ கினியா பிரதமர் செய்த செயல்!
பப்புவா நியூ கினியா நாட்டிற்கு முதல் முறைய்க சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வித்தியாசமான முறையில் பப்புவா நியூ கினியா முதல்வர் வரேற்றார். பப்புவா நகயூ கினியா நாட்டின் பாரம்பரிய முறைப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பார்த்த பப்புவா நியூ கினியா பிதரமர் ஜேம்ஸ் மரேபா உடனே பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் காலில் விழ கீழே குனிந்தார்.  உடனே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பப்புவா நியூ கினியா பிரதமரின் முதிகில் கை வத்து எழுப்பி தட்டிக் கொடுத்தார்.
வரவேற்புக்கு பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மரேபாவை சந்தித்தித்தார். அதன் பிறகு பப்புவா நியூ கினியா நாட்டு மொழியான டோக் பிசின் மொழியில் பெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்டார்.
இதற்கு பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், பப்புவா நியூகினியா பிரதமர் ஜேம்ஸ் மரேபாவும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் இரு நாடுக்களுக்கிடையே வர்த்தகம், ஆரோக்கியம், தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, முதலீடு போன்று பல பிரிவுகளில் இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த சந்திப்பின் பொழுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பப்புவா நியூ கினியா பிரதமர்.ஜேம் மரேபா இருவர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.