நான்கு முதல்வர்களிடம் பணியாற்றிய முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு 

Photo of author

By Anand

நான்கு முதல்வர்களிடம் பணியாற்றிய முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு

உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா புதன்கிழமை இன்று மதியம் 1 மணியளவி்ல காலமானார். அவருக்கு வயது 77 ஆகிறது.

மதுரை மாவட்டம், சேடபட்டியை சேர்ந்தவர் சேடப்பட்டி ரா.முத்தையா. இவர் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி பிறந்தவர். தனது கடைசி காலத்தில் திமுகவில் பணியாற்றி வந்தார். மேலும் இவருடைய மகன் மணிமாறன், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகபதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.