கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு எதைப் பிடிச்சிருக்கு பாருங்க! ரசிகர்களுக்கு ஷாக்!

0
68
See what Kamal Haasan's daughter Sruthi Haasan likes! Shock to the fans!
See what Kamal Haasan's daughter Sruthi Haasan likes! Shock to the fans!

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு எதைப் பிடிச்சிருக்கு பாருங்க! ரசிகர்களுக்கு ஷாக்!

கமல்ஹாசனின் மகள் என்றாலே எல்லோருக்குமே தெரியும் சுருதிஹாசன் தான் என்று. இவரின் பிறப்பு ஜனவரி 28,1986. திரைப்படங்களில் நடிகை மட்டுமல்லாமல் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி கொள்கிறார். இவர் முதன்முதலில் நடித்த படம் 2000 இல் “ஹே ராம்” என்ற திரைப்படத்தில் ‘வல்லபாய் பட்டேல்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்தத் திரைப்படம் தமிழில் மற்றும் ஹிந்தியில் வெளியானது.

அதன் பிறகு பல திரைப்படங்களில் மானாவாரியாக நடித்துத் தள்ளி விட்டார். பிறகு 2012 இல் “3” என்ற திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ‘ஜனனி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் புகழ் வாய்ந்தது.அத்திரைப்படத்தில் “ஆசியாவின் மிக சிறப்பான திரைப்படம்” விருது மற்றும் “நடிகைக்கான ஃபிலிம் பேர்” என்ற விருதும் வாங்கினார்.

அதன் பிறகு பல தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இப்பொழுது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் “லாபம்” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.தற்போது பிரபாஸ் ஜோடியாக தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் என பல மொழிகளில் தயாராகும் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சுருதிஹாசன் தனக்குப் பிடித்த உணவுகள் பற்றி பேட்டி எடுத்த பொழுது அவர் கூறியது என்னென்ன உணவு வகைகள் என்றால் எனக்கு ‘ஜப்பானிய உணவுகள்’ அதிகம் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.அதைவிட முக்கியமாக சாதம்,பருப்பு சாம்பார், மற்றும் தயிர் இவற்றை வாழையிலையில் வைத்து சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்,மற்றும் சூப் கிரில்டு சிக்கன் என்றாலே என் வாயில் எச்சில் ஒளிவிடும்  என்றுக் கூறினார்.பழம் வகைகளில் மாம்பழம் ,சீதாப்பழம் மிகவும் பிடிக்கும் இளநீர் விரும்பி சாப்பிடுவேன் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமையலறைக்கு போய் நானே சமைத்து சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

நான் நன்றாக செய்வதில்  வெண்ணிலா ஐஸ்கிரீம் பிடித்தமான ஒன்று என்று கூறியிருக்கிறார்.மொத்தத்தில் சாப்பிடாமல் வாயைக் கட்டிக் கொண்டு வயிற்றைக் காயப் போடுவதைவிட எனக்கு இஷ்டமானவற்றை நான் நன்றாக சாப்பிடுவேன். சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சிகள் செய்வது எனக்குப் பிடிக்கும் அது நல்லது என்றும் கூறியிருக்கிறார்.

author avatar
Parthipan K