உங்கள் வீட்டு சமையலறையில் கல் உப்பு ஜாடி எந்த பக்கம் இருக்குனு பாருங்க!! இப்படி இருந்தால் கடன் ஏற்படும்!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டு சமையலறையில் கல் உப்பு ஜாடி எந்த பக்கம் இருக்குனு பாருங்க!! இப்படி இருந்தால் கடன் ஏற்படும்!!

வீட்டில் செல்வம் நிறைந்து செழிப்போடு வாழவேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது.பீரோவில் பணம் கட்டு கட்டாக இருக்க வேண்டும்.செல்வங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்ற ஆசை ஏழை,பணக்காரர் அனைவருக்கும் இருக்க கூடிய ஒரு பொதுவான ஆசை.

வீட்டில் செல்வம் நிலைக்க நமது கடின உழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.உழைத்த பணம் வீண் விரையம் ஆகாமல் இருந்தாலே நாம் பணக்காரர்கள் தான்.ஆனால் செலவு வரவை மீறி செல்லக் கூடிய இன்றைய உலகில் பணத்தை சேமித்து வைப்பது என்பது கடினமானவையாக உள்ளது.

நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரையம் ஆகாமல் இருக்கவும்,அதன் வரவு அதிகரிக்கவும் கடவுள் ஆசீர்வாதம் நமக்கு இருக்க வேண்டும்.சிலர் தங்கள் வீட்டு பீரோவில் உள்ள பணப்பெட்டியில் செல்வங்களை அள்ளி கொடுக்கும் மகா லட்சுமி தேவிக்கு உகந்த வாசனை நிறைந்த வெற்றிலை,பச்சை கற்பூரம்,கிராம்பு போன்ற பொருட்களை வைத்து வழிபடுவார்கள்.

சிலர் பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள்.கல் உப்பில் மகாலட்சுமி தாயார் குடியிருக்கிறார் என்பது ஐதீகம்.

மஹாலட்சுமி தாயார் நம் வீட்டு சமையலறையில் தான் குடியிருக்கிறார்.அப்படி இருக்கையில் நமது சமையலறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.வாசனை நிறைந்த ஏலக்காய்,சோம்பு,இலவங்கம் போன்ற பொருட்களை வைத்திருக்க வேண்டும்.அதேபோல் சமைக்கும் அடுப்பிற்கு வலப்பக்கமாக கல் உப்பு ஜாடி இருக்க வேண்டும்.

ஜாடியில் உப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.ஒரு சுத்தமான தட்டில் ஒரு ரூபாய் நாணயங்கள் வைத்து அதன் மேல் கல் உப்பு ஜாடியை வைத்தால் தன வரவு அதிகமாகும்.

அதேபோல் ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் சிறிதளவு கல் உப்பு நிரப்பி விடவும்.பிறகு அதன் மீது ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஒரு துண்டு வசம்பு போட்டுக் கொள்ளவும்.பிறகு மீண்டும் கல் உப்பு நிரப்பி பணம்,நகை உள்ள இடத்தில் வைத்தால் அதன் வரவு மென்மேலும் அதிகரிக்கும்.