உங்கள் WHATSAPP-இல் புதிதாக “ப்ளூ ரிங்” தென்படுகிறதா? உடனே இதை செய்யுங்கள்!

0
106
SEEING A NEW "BLUE RING" ON YOUR WHATSAPP? Do this now!

உங்கள் WHATSAPP-இல் புதிதாக “ப்ளூ ரிங்” தென்படுகிறதா? உடனே இதை செய்யுங்கள்!

இன்றைய உலகம் நடப்புகளை நொடியில் அறிந்து கொள்ளும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது.தற்பொழுது AI ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டதால் மனித வாழ்க்கையில் பல விஷயங்கள் எளிமையாகி வருகிறது.அந்த வகையில் மெட்டா நிறுவனம் AI தொழிநுட்பத்தை தற்பொழுது வாட்ஸ்அப் செயலியில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.இந்த மெட்டா AI வசதி முன்னதாக கனடா,நியூசிலாந்து,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மட்டுமே இருந்து வந்தது.இந்நிலையில் தற்பொழுது வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைத்து நாடுகளிலும் இந்த வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

மெட்டா ஏஐ மூலம் வீடியோ,போஸ்ட்களை டைப் செய்து பெற முடியும்.பிற மொழியின் சாட்களை எளிதில் புரிந்து கொள்ள Meta AI உதவுகிறது.நீங்கள் நினைப்பதை டைப் செய்தால் மெட்டா AI அவற்றை படங்களாக உருவாக்கி தரும்.

மெட்டா AI பயன்படுத்துவது எப்படி?

உங்கள் வாட்ஸ்அப் செயலியில் வலது மூலையில் காணப்படும் “ப்ளூ ரிங்”-ஐ க்ளிக் செய்யவும்.பின்னர் அதில் உள்ள நிபந்தனைகள் படித்துவிட்டு கிளிக் செய்யவும்.பிறகு உங்கள் கேள்விகளை மெட்டா AI-யிடம் கேட்டால் அதற்கு உரிய பதில் கிடைக்கும்.மின்னஞ்சல் எழுத,புதியதாக ஏதேனும் தெரிந்து கொள்ள,தங்கள் எண்ணங்களில் உள்ளவற்றிற்கு பதில் தெரிந்து கொள்ள மெட்டா AI உதவும்.

இந்நிலையில் மெட்டா அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த புதிய சேவை வாட்ஸ்அப் பயனர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.சாட் ஜிபிடி போன்று மெட்டா AI-யும் செயற்கை தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருக்கிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.