இறந்தவர்களை கனவில் பார்த்தால் நல்ல செய்தி வருமா? கெட்ட செய்தி வருமா?

Photo of author

By Rupa

இறந்தவர்களை கனவில் பார்த்தால் நல்ல செய்தி வருமா? கெட்ட செய்தி வருமா?

நம் உறக்கத்தில் வரும் கனவுகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது.நமது ஆழ் மனதில் இருக்க கூடிய நினைவுகள் தான் கனவாக தோன்றுகிறது.சொகுசாக வாழ்வது,நல்ல வேலை கிடைப்பது போன்றவை மட்டுமே நல்ல கனவுகள் அல்ல.நமக்கு நெருக்கமானவர்கள் இறந்த பின்னர் கனவில் வந்தாலும் நல்ல கனவுகள் தான்.

தங்களுக்கு மிகவும் பிடித்த நம்பர்கள்,உறவுகள் இறந்த பின்னர் அவர்கள் நினைவு ஆழமாக இருந்தால் அடிக்கடி அவர்கள் கனவில் தோன்றுவார்கள்.இதனால் ஒருவித அச்சம் ஏற்படும்.ஆனால் இறந்தவர்கள் கனவில் வந்தால் பல நன்மைகள் நமக்கு உண்டாகுமாம்.

தங்களது கனவில் இறந்த பெற்றோர்கள் வந்தார்கள் என்றால் தங்களை சூழ்ந்த பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் விலகப் போகிறது என்று அர்த்தம்.குறிப்பாக இறந்த அப்பா கனவில் வருகிறார் என்றால் நமது தீராத கஷ்டங்கள் தீர்ந்துவிடும்.

இறந்த அம்மா கனவில் வந்தால் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.நன்றாக வாழ்ந்து அனுபவித்த பெரியவர்கள் கனவில் வந்தால் அவர்களின் ஆசிவார்த்தம் கிடைக்கிறது என்று அர்த்தம்.

இறந்து போன உறவினர் யாரவது தங்கள் கனவில் வந்தார்கள் என்றால் தங்களுடைய துன்பங்கள் அனைத்தும் தீர போகிறது என்று அர்த்தம்.கனவில் இறுதி சடங்கு நடப்பது போன்று தோன்றினால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறப்போகிறது என்று அர்த்தம்.நாமே இறப்பது போன்று கனவு வந்தால் நமது ஆயுள் கூடும்.

இறந்தவர்களை தூக்கி செல்வது போல கனவு வந்தால் பல நம்மை வந்து சேரப் போகிறது என்று அர்த்தம்.இறந்த ஒருவர் தங்களிடம் உரையாடுவது போன்று கனவு வந்தால் தங்கள் கஷ்டங்களை போக்க சிலர் உதவுவார்கள் என்று அர்த்தம்.

இறந்தவர் சாப்பிடுவது போன்று கனவு வந்தால் நீங்கள் செல்வ செழிப்புடன் வாழப் போகிறீர்கள் என்று அர்த்தம்.கனவில் இறந்தவர்கள் அழுதால் தங்களுக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்று அர்த்தம். இயற்கை மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் தங்களுக்கு பல நல்ல பலன் கிடைக்கும்.