சீமான் விடுத்த எச்சரிக்கை! கடும் அதிர்ச்சியில் ரஜினி கமல்!

0
142

நடிகர் கமல்ஹாசன் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். மதுரையில் இரண்டாவது தலைநகராக ஆக்குவேன் எனவும் , இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், அனைத்து வீடுகளுக்கும் இணையதள வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்து இருக்கின்றார். அதேபோல நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கான வேலைகளை செய்து வருகின்றார்.

கமல்ஹாசன் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் உடைய வாரிசுதான் நான் இன்று தெரிவித்து வருகின்றார். அதேபோல எம்.ஜி.ஆர் ஆட்சியை தமிழக மக்களுக்கு அளிப்பேன் என்று ரஜினியும் தெரிவித்திருக்கின்றார். ரஜினி ஜனவரி மாதம் 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினி, மற்றும் கமல், இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார். அவர் தெரிவித்ததாவது, ரஜினியின் கமல்ஹாசனும் எம்.ஜி.ஆர் பெயரை வைத்து அரசியல் செய்ய விரும்புகிறார்கள்.

எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி தான் அதிமுக எனவே இருவரும் எம்.ஜி.ஆரை பற்றி பேசினால் வாக்குகள் இரட்டை இலைக்குத் தானே போகும் என்றும், எம்.ஜி.ஆர் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர். எம்.ஜி.ஆரை பற்றி பேசுவதற்கான தகுதி இவர்களுக்கு இருக்கின்றதா? இவர்களுடைய ஈழத்தின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கமல்ஹாசன் எந்த போராட்டத்திலும், பங்கேற்காமல் தேர்தலின் போது மட்டும் மக்களை சந்திக்கிறார் அது ஏன் என்ற கேள்வியை எழுப்பியதற்கு, அரசியலே தெரியாமல் பேசுபவர்கள் மக்களை கேவலமாக நினைப்பதாக கமலின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவருடைய தந்தை தெரிவித்திருக்கின்றார். என்று கேட்டதற்கு ரஜினியையும் கமலையும் அடிக்கின்ற அடியில் எந்த நடிகனும் கட்சி தொடங்க வேண்டும் என்று நினைக்கவே கூடாது நான் சொல்வது அனைவருக்கும் சேர்த்து தான். நடிப்பது மட்டுமே அவர்கள் வேலை அரசியலுக்கு தகுதி என்பதை இந்த தேர்தலுடன் முடிவு செய்ய வேண்டும் என்று மிகக் காட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

நான் சினிமாவை சேர்ந்தவன் என்றாலும் கூட ரஜினி கமல் இவர்களெல்லாம், ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வந்தவர்கள். நான் மக்களை சந்தித்து அரசியலுக்கு வந்தவன் என்று விளக்கம் அளித்திருக்கிறார் சீமான்.

Previous articleவட மாவட்டங்களில் தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் திமுக! உச்சகட்ட குழப்பத்தில் திமுக தலைமை
Next articleதமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்:? முதல்வர் ஆலோசனை!!