தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்:? முதல்வர் ஆலோசனை!!

0
81

தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்:? முதல்வர் ஆலோசனை!!

பிரிட்டனில் மரபியல் மாற்றம் அடைந்த வீரியமுள்ள கொரோனவைரஸ் பரவுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரிட்டனில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.புதிய வகை கொரோனவைரஸினால் மீண்டும் உலக நாடுகள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.இது மட்டுமின்றி பல நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவையை முற்றிலும் ரத்து செய்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு மரபியல் மாற்றம் அடைந்த புதிய வகை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உறுதி செய்துள்ளார்.மேலும் புதிய வகை கொரோனா தொற்று பரவிய நபரை வீட்டில் தனிமை படுத்தப்பட்டு உள்ளதாகவும் மேலும் பிரிட்டனில் இருந்து வந்த 553 நபர்களையும் பரிசோதித்ததாகவும் அதில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவரையும் தனிமைப்படுத்தப்
பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

இதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.இந்நிலையில் வரும் 28ஆம் தேதியன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் வருகின்ற 28-ம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தவுள்ளது மக்களிடையே மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி வருகின்ற 28-ம்தேதி தமிழக முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

author avatar
Pavithra