DMK NTK: அதிமுக ஆட்சி காலத்தில் செய்த ஊழலால் அமலாக்கத்துறைப் பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜி அடுத்து மதுபான முறைகேட்டு வழக்கில் பல்வேறு திமுக முக்கிய புள்ளிகள் மாட்ட உள்ளனர். இது ரீதியாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உதயநிதிக்கு மிகவும் நெருங்கிய சினேகர்களான ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் இந்தியாவிலேயே இல்லை. இவர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்தபடியாக இந்த விசாரணை வலைக்குள் உதயநிதி தான் என கூறி வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கொலை கொள்ளை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் உதயநிதி மேல் குற்றம் சுமத்திவிட்டால் மீண்டும் வெற்றி பெற முடியாது. இதனை அறிந்து, தற்பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் மோடியை காண டெல்லிக்கு சென்றுள்ளார். நாளை டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
கடந்த மூன்று முறை இந்த கூட்டம் நடந்தபோதும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. தற்போது தான் கலந்து கொள்ள வேண்டுமென டெல்லி சென்றுள்ளார். அதுமட்டுமின்றி மோடியை தனியாக சந்திக்க வேண்டும் என்றும் முன் அனுமதி கேட்டுள்ளார்களாம். மோடியை தனியாக சந்திக்கும் பட்சத்தில் ஸ்டாலின், அமலாக்கத்துறை விசாரணை குறித்து பேச உள்ளதாக அரசியல் தெரிந்த வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
இது ரீதியாக சீமான் கூறுகையில், மூன்று முறை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்ற போது ஸ்டாலின் செல்லவில்லை தற்போது மட்டும் ஏன் செல்கிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளார். அமலாக்கத்துறை விசாரணை என்று வந்துவிட்டாலே உடனடியாக மோடியை சந்தித்து விடுகின்றனர். ஆளும் கட்சிக்கு அப்படி ஒரு பயம் இருக்கிறது, ஆனால் எங்களுக்கு கிடையாது. திமுகவும் அதிமுகவும் பரிசுகள் அளிப்பது, கொள்கைகள் என எந்த வேறுபாடு இல்லை. எல்லாமே ஒன்றுதான்.
அதிலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் இடையே கட்சி கொடிகள் மட்டும் தான் மாறி காணப்படும் என்று கூறியுள்ளார். இதே போல தான் திமுகவும் தேர்தல் சமயத்தில் வாக்குக்கு காசு கொடுக்கும் அதே போல அதிமுகவும் கொடுக்கும் இதில் மாற்று கருத்து என்பது இருக்காது. இப்படி இருவரும் ஒன்றாக இருப்பதில் இந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.