“செங்கலை திருடிய திருட்டு பயலுகள் தான் நீங்கள்” திமுக வை ரைட் லெப்ட் வாங்கிய சீமான்!!

Photo of author

By Rupa

NTK: எய்ம்ஸ் மருத்துவமனை தற்பொழுது வரை கட்டாதது குறித்து நாம் தமிழர் சீமான் திமுக மீது குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீமான் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியானது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட வில்லை என புரட்சி செய்த திமுக மீது கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர வேண்டுமென முதலாவதாக வலியுறுத்தியது பாமக மருத்துவர் அய்யா அன்புமணி தான்.

இவர் திமுக காங்கிரசுடன் கூட்டணியில் மத்திய சுகாதார  துறை அமைச்சராக இருந்தபொழுது இந்த திட்டத்தை கொண்டு வந்தார்.எய்ம்ஸ் க்கு அடிக்கல் நாட்டியது என்றால் அவர் தான். தற்பொழுது வரை கட்டி முடிக்கவில்லை. தற்பொழுது அமைச்சரவையில் 39 திலிருந்து 40  உறுப்பினர்கள். உறுப்பினர்களை அதிகரித்த பிறகும் கட்டி முடிக்கவில்லை.இவ்வளவு ஏன்?? அங்கிருந்த ஒற்றை செங்கலையும் புரட்சி என்ற பெயரில் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டீர்கள், செங்கலை திருடி சென்ற திருட்டு பயலுங்கள் தான்  நீங்கள். ஒற்றை செங்கலை திருடி விட்டு புரட்சி என சொல்வதெல்லாம் கேவலம் என சரமாரியாக பேசியுள்ளார்.