அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். சினிமா கதாசியர் மற்றும் இயக்குனராக இருந்து ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்துவிட்டார். நாம் தமிழர் கட்சி என்கிற கட்சியை துவங்கி அரசியல் செய்து வருகிறார். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், நடிகை விஜயலட்சுமி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டும் சீமானின் மீது இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக அவரின் வீட்டில் சம்மன் ஒட்ட போலீசார் சென்றபோது, அதை சீமானின் பாதுகாவலர் கிழிக்க அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலரை போலீசார் கைதி செய்தனர். அதன்பின் போலீஸ் நிலையம் சென்று வாக்குமூலம் கொடுத்தார் சீமான்.
ஒருபக்கம், பெரியாரை பற்றி இழிவாக பேசி பலரின் எதிர்ப்பையும் சந்தித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சியை தடுக்க வேண்டும் என்பதே சீமானின் நோக்கமாக இருக்கிறது. ஆனால், எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறார். ஆனால், திடீர் திருப்பமாக சில நாட்களுக்கு ரஜினியை போய் சந்தித்தார். அதன்பின்னரே பெரியாரை திட்ட துவங்கினார்.
ஒருபக்கம், திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது. எனவே பாஜக கூட்டணியில் சீமானும் இணைவரா என்கிற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.
இந்நிலையில், நிர்மலா சீதாராமனை நான் சந்திக்கவில்லை என சீமான் விளக்கமளித்துள்ளார். அவரை சந்தித்தேன் என்றால் சந்தித்தேன் என சொல்லப்போகிறேன். எனக்கென்ன பயம் இருக்கிறது?.. நான் யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை’ என சொல்லியிருக்கிறார்.