கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது! சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி!

0
184

கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது! சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி!

சீமான் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த சிக்கல் சில ஆண்டுகளை கடந்து வந்த நிலையில், சமீபத்தில் சீமானுடன் இருக்கும் மூன்று அந்தரங்க வீடியோவை நடிகை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சட்டை இல்லாமல் சினிமா டயலாக்கை டிக்டாக்கில் பேசுவதுபோல் சீமான் பேசியிருந்தார்.

இதற்கு நாம் தமிழர் கட்சியினர் காட்டமாக எதிர்வினையாற்றி வருகின்றனர். அவர்கள் குறித்து பேசிய விஜயலட்சுமி அவர்களை மவுத் பீஸ் எனக் கேலி செய்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளரான காளியம்மாளுக்கும் விஜயலட்சுமிக்கும் இது சம்மந்தமாக வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இதுபற்றி இதுவரை வாய் திறக்காமல் இருந்த சீமான் இப்போது முதல் முறையாக பேசியுள்ளார்.

சீமானிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் விஜயலட்சுமி பற்றி ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப முயன்றபோது ‘இதுவரை கேள்விகள் கேட்டீர்கள்.. பதில் சொன்னேன். இதுபோன்ற கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது’ எனக் கோபமாக பதில் சொல்லியுள்ளார். இதற்கு முன்னர் இதுபோல பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு சீமான் பதில் சொல்லாமல் இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகள்ளக்காதலை அம்பலபடுத்திய சிறுவன் அடித்துக் கொலை; காதலன் சொரிமுத்து கைது! தொடரும் அபிராமி சம்பவங்கள்..!!
Next articleஎதிர்பார்த்த டைட்டில்: உற்சாகத்தின் உச்சத்தில் ‘தலைவர்’ ரசிகர்கள்