எங்கள் ஆட்சி வருவதற்கு முன் அவர்கள் இறந்துவிடுவார்கள்: சீமான்

0
207

எங்கள் ஆட்சி வருவதற்கு முன் அவர்கள் இறந்துவிடுவார்கள்: சீமான்

என் மீதும் எனது கட்சியினர் மீதும் வழக்கு தொடுத்தவர்கள், சிறை வைத்தவர்கள் எங்கள் ஆட்சி வருவதற்கு முன் இறந்துவிடுவார்கள் என்று சீமான் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

ரஜினி அரசியலுக்கு வரட்டும், ’ஐயாம் வெயிட்டிங்’ என்று கூறிய சீமான், ‘நாட்டை யார் முதலில் விற்பது என்பதுதான் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவிற்கு இடையேயான வித்தியாசம் என்றும், எனக்கு வாக்களித்தால் மட்டுமே வாழ்வீர்கள், இல்லையெனில் சாக வேண்டியதுதான் என்றும் ஆவேசமாக பேசினார்.

கருணாநிதியை முதல்வராக விடாமல் தடுத்தது நான் தான் என்றும், முதல்வராக இருக்கும்போதே அவர் இறந்துவிடக்கூடாது என்று நினைத்ததாகவும், அதை நடத்தியதாகவும் கூறினார். மேலும் பிரபாகரனை பயங்கரவாதி என்றும் நடிகர் ரஜினிகாந்தை தலைவர் என்றும் கூறும் நிலைத்தான் தமிழகத்தில் உள்ளதாகவும் தனது ஆட்சி வந்தபின்னர் இதெல்லாம் மாறிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Previous articleகமல்ஹாசன் உடல்நலம் குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை
Next articleபள்ளிக்கல்வி துறையில் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அதிரடி! கலக்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்