NTK BJP: ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதனை எதிர்க்கும் வகையில் தமிழக அரசானது அனைத்து கட்சி பொதுக்கூட்டம் நடத்தி இதற்கு கண்டனம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் சீமான் கலந்து கொள்ளவில்லை. அதேபோல சமீபத்தில் கூட சீமான் மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்படி கலந்து கொண்டு வெளியே சென்ற சீமானின் கையை அண்ணாமலை இறுக்கமாக பிடித்து, அண்ணா விட்றாதீங்க எனக் கூறியது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் இதில் கட்டாயம் கலந்துகொள்ள மாட்டேன் என சீமான் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார். இது குறித்த அறிவிப்பை அவர் மதுரையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் ஆலோசனைக் கூட்டத்தில் கூறியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் பாஜக விற்கு எதிராக கண்டனங்கள் எழுப்பும் போதெல்லாம் சீமான் பின்வாங்கவே செய்கிறார். இவர்கள் மறைமுக கூட்டணியில் உள்ளனர் என்றும் பேச்சுவார்த்தை அடிப்படுகிறது. அதனால்தான் பாஜக ரீதியாக எழுப்பும் எந்த ஒரு கண்டன கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் பட்சத்தில் இவர்கள் கூட்டணி குறித்து உறுதி செய்யப்படும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அவர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி எஜமானர்களுக்கு அடிபணிந்து சீட்டு கேட்கும் முறையே எங்களுக்கும் வேண்டாம், அதேபோல கூட்டணியில் எலியாய் இருப்பதை விட சிங்கமாய் கர்ஜித்து தனித்து செத்து போவது மேல். ஆனால் நான் சிங்கமும் இல்லை நான் புலி, சுதந்திரமாக வேட்டையாடி நான் நினைத்த காரியத்தை சாதிப்பேன் என்று இவர் கூறியுள்ளார்.