DMK NTK: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சிபா ஆதித்தனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வழங்கினார். மேற்கொண்டு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, திமுகவும் பாஜகவும் ஒன்றுதான். பிரதமரை சந்திக்க பல்வேறு தருணங்கள் இருந்த போதிலும் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. இதேபோல எண்ணற்ற பிரச்சனைகளும் இருந்தது அப்போதும் இது ரீதியாக பேசி சரி செய்து இருக்க முடியும்.
அந்த வகையில் மூன்று நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல்வர் தற்போது மட்டும் கலந்து கொள்வதற்கு காரணம் உள்ளது. தற்போது அமலாக்கத்துறை திமுகவே வட்டம் கட்டுவதால் தான் டெல்லிக்கு சென்றுள்ளார். அரசியலில் ஏற்படும் லாபத்தை பார்க்கவே பாஜகவுடன் திமுக இணைந்து காணப்படுகிறது. நடந்து முடிந்த இந்திய பாகிஸ்தான் சித்தூர் ஆபரேஷன் போரை ஆதரித்து சென்னையில் இது ரீதியாக ஸ்டாலின் பேரணி நடத்தினார்.
இதில் துணை முதல்வர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பாஜக ஆளும் மாநில அரசு கூட ஆதரித்து பேரணி நடத்தாத போது, தமிழ்நாடு நடத்தியது கேள்விக்குறியாக உள்ளது. இது ரீதியாக ஆளுநர், அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு நபர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரில் ஏதாவது நியாயம் உள்ளதா?? எத்தனை தீவிரவாதிகள் தற்போது வரை சுடப்பட்டுள்ளனர். இந்தியாவிற்குள் நுழைந்து அப்பாவி பொதுமக்களை சுட்ட தீவிரவாதிகள் நிலை என்ன??
அதேபோல நமது நாட்டுக்குள் புகுந்து தாக்குவதற்கு எப்படி தைரியம் வந்தது. நம் மீது தாக்குதல் நடத்தினால் கொன்று விடுவார்கள் என்ற அச்சம் இருந்திருந்தால் கட்டாயம் இந்த கோர ஆசம்பாவிதம் நடந்திருக்காது. இதே போல தான் புல்வாமா தாக்குதலில் 42 ராணுவ வீரர்களை இழந்தோம். நம்மால் மக்களையும் ராணுவ வீரர்களையும் காப்பாற்ற முடியவில்லை எனக் கூறினார்.