இது தலைமை பண்புக்கு உகந்த செயல் அல்ல! முக்கிய தலைவரை விளாசிய சீமான்!

0
65

சென்ற 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்த நிலையில், 4 ஆண்டுகாலம் சிறை வாசத்திற்குப் பின்னர் சென்ற ஜனவரி மாதம் சசிகலா விடுதலை ஆனார்.

இந்தநிலையில், அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தீவிர அரசியலில் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டு வந்த சூழலில் அவர் அரசியலை விட்டு விலக ஒரு அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். தற்சமயம் அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுடன் அவர் தொலைபேசியில் அவ்வப்போது உரையாற்றி வருகிறார் என்பது எல்லோரும் அறிந்ததுதான்.

அதிமுகவை சசிகலா கைப்பற்ற போவதாகவும் விரைவில் அவர் தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும் சசிகலா அடிக்கடி தெரிவித்து வருகின்றார். இதற்கிடையில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி வரும் அதிமுக தொண்டர்களை அந்த கட்சியின் தலைமை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி விடுகிறது .ஆனாலும் சசிகலா தொடர்ச்சியாக அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு சசிகலா தொண்டர்களுடன் உரையாடும் ஆடியோ அவ்வபோது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்து வருமாறு இது நல்லது இல்லை நிறுத்திவிடுங்கள் என்று நான் சசிகலாவிடம் அநேக முறை கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

இருந்தாலும் அவர் தொடர்ந்து அதே தவறை செய்து வருகிறார் இவ்வாறு ஆடியோ வெளியிடுவது சரி கிடையாது. உளவுத்துறை கூட நான் பேசுவதை பதிவு செய்து வைத்துக் கொள்ளுமே தவிர பகிரங்கமாக வெளியிடாது இவ்வாறு இருக்கும் சூழலில் ஒரு தலைவர் என்று மதித்து அவரிடம் உரையாடுவதை பதிவுசெய்து பொதுவெளியில் வெளியிடுவது கொஞ்சமும் நாகரீகம் இல்லாத செயல் என்று தெரிவித்திருக்கின்றார்.

இதுபோன்ற செயல் தலைமை பண்புக்கு ஏற்றது இல்லை தொண்டர்களை சந்தித்து பேச வேண்டுமென்றால் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு கட்சியை வழி நடத்துவேன் என் மீது நம்பிக்கை இருந்தால் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி மீது பாசம் வைத்திருக்கும் தொண்டர்கள் இந்த நாளில் இந்த இடத்திற்கு வாருங்கள் என்று தெரிவித்து நேரடியாக தொண்டர்களுடன் உரையாடுவது தான் சரியான முறையாக இருக்கும்0 அதை விடுத்து யார் யாரிடமோ பேசி அதனை எல்லோருக்கும் போட்டு காட்டுவது நாகரீகமான செயலாகப் தெரியவில்லை என்று தெரிவித்து இருக்கின்றார் சீமான்.