நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ரமலான் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டார். அதில் இஸ்லாம் இயக்கத்தை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர். அந்த விழாவில் நிறைய குளறுபடிகள் நடந்தது. டோக்கன் வைத்திருந்த பலரையும் உள்ளேவிடவில்லை. அதேநேரம், மது அருந்திவிட்டு சில விஜய் ரசிகர்கள் உள்ளே புகுந்தனர் என புகார்கள் எழுந்தது. இந்நிலையில்தான், விஜய் ஒரு முஸ்லீம் விரோதி என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்வி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் தனது படங்களில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டியவர். அவர் ஒரு முஸ்லீம் விரோதி. அவரை நம்ப வேண்டாம். இஸ்லாம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்க வேண்டாம். அவர் ஒரு சைத்தான். முஸ்லீம்களை வாக்குகளை பெறுவதற்காக அவர் நாடகம் போடுகிறர்’ என பேசினார். மேலும், சென்னையில் நடந்த இப்தார் விருந்தில் குடிகாரார்கள், சூதாட்டக்காரார்களை வரவழைத்து இப்தார் விருந்தையே கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார்’ என பேசியிருந்தார்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சீமான் ‘அவ்வளவு ஆழமாக பார்க்க தேவையில்லை. விஜய் அப்படியெல்லாம் நினைக்கும் ஆள் இல்லை. அவர் மிகவும் யதார்த்தமானவர். ஏதோ தெரியாமல் சில தவறுகள் நடந்திருக்கலாம். இப்படியெல்லாம் பேசினால் விஜய் இனிமேல் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவாரா?.. என் தம்பியை பத்தி எனக்கு நல்லா தெரியும்’ எனா பேசியிருக்கிறார்.
இதே சீமான்தான் விஜயை கடுமையாக திட்டியவர். ‘ஒன்னும் அந்த பக்கம் போ. இல்ல இந்த பக்கம் வா. நடுரோட்ல நின்னா லாரியில் அடிபட்டுதான் சாவ’ என்றெல்லாம் பேசியிருக்கிறார். இப்போது ஜமாத் தெரிவித்துள்ள கருத்திற்கு எதிராக அதாவது விஜய்க்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இதையடுத்து ‘அது வேற வாய்.. இது நார வாய்’ என விஜய் ரசிகர்கள் சீமானை கலாய்த்து வருகிறார்கள்.