நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் போதே அரசியலுக்கு வந்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். மேலும், திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார்.
அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து மட்டுமே அரசியல் செய்து வருகிறார். காட்சி துவங்கி ஒரு வருடம் ஆகியும் இன்னமும் அவர் செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை. செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் சொன்னால் அவருக்கு ஒன்னும் தெரியாது என்பது தெரிந்துவிடும் என்றும் திமுகவினர் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால், இதற்கெல்லாம் அவர் எந்த பதிலும் சொல்வதில்லை. ஆனால், வழக்கமாக அரசியல்வாதிகள் என்ன செய்வார்களோ அவற்றை மட்டும் தொடர்ந்து செய்து வருகிறார். அதாவது மாநில மற்றும் மத்திய அரசை விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். மேலும், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் விஜயை பார்க்க அவரின் ரசிகர்களும் தொண்டர்களும் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உணவு பொருட்கள் சிதறி கிடந்த வீடியோக்களும் வெளியானது. இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான் ‘ஒரு நாள் தொப்பி போட்டு வேஷம் போடும் ஆள் நான் இல்லை. இஸ்லாம் மதத்தில் கூட எனக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள். இஃப்தார் நோன்பு விழாவில் விஜய் கலந்துகொண்டதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என பேசியிருக்கிறார்.