அதிமுக திமுக -வை அடித்து தூக்கிய சீமான்.. அரசியலையே புரட்டிப்போட வரப்போகும் டர்னிங் பாயிண்ட்!!

Photo of author

By Rupa

அதிமுக திமுக -வை அடித்து தூக்கிய சீமான்.. அரசியலையே புரட்டிப்போட வரப்போகும் டர்னிங் பாயிண்ட்!!

விக்ராவண்டி தேர்தலானது நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு குறித்து பல விமர்சனங்கள் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்கு பதிவானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 82. 48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறினர். இதில் திமுக பாமக நாதக உள்ளிட்டோரின் மும்முனைப் போட்டி நிலவியது.இதில்பல, அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்து விட்டதால் அதன் வாக்கு வங்கி யாருக்கு செல்லும் என்றும் அதேபோல திமுக-வின் அதிருப்த்தி வாக்குகள் யாருக்கு செல்லும் என்றும் பெரும் கேள்வியாகவே இருந்தது. தேர்தல் பரப்புரை என ஆரம்பித்து தற்போது வாக்கு பதிவு முடிவடைந்தது வரை பலரும் வாக்கு சதவீதம் குறித்து தான் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி நேரடியாகவே அதிமுகவின் ஆதரவு வேண்டுமென கேட்டது. அதேபோல பாமகவும் அதிமுகவின் பெரிய ஜாம்பவான்களான ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் அவர்களின் புகைப்படங்களை வைத்து வாக்குகளை சேகரித்தது. இவ்வாறு இரு கட்சிகளும் அதிமுகவை எதிர்நோக்கிய நிலையில் யாருக்கும் அதிமுகவின் வாக்கு வங்கி செல்லும் என்பது குழப்ப நிலையில் இருந்தது. தற்பொழுது சீமானுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலை காட்டிலும் இந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து நின்று ஏழு புள்ளி ஒன்பது சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.

மேற்கொண்டு இளைஞர்களின் எழுச்சியை தூண்டும் அளவிற்கு இவரது பேச்சும் இருந்து வருகிறது. அதிமுகவின் ஆதரவை நேரடியாகவே நாடியதால் அவர்களது வாக்கு வங்கி நாம் தமிழருக்கு செல்லலாம் என கூறுகின்றனர். அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் திமுகவின் மீது பலரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அவர்களது ஓட்டும் சீமானுக்கு செல்லும் பட்சத்தில் அரசியல் ரீதியாக இது பெரும் மாற்றத்தை கொண்டு வரும். வாக்கு சதவீதம் அதிகரித்து அடுத்த நிலைக்கு தள்ளப்படுவர். இது சீமானுக்கு டர்னிங் பாயிண்டாக இருக்கும் என்று அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.